சூரசம்ஹாரம் & கந்த சஷ்டி விரதம்
Sooranporu or Soorasamharam part of Skanda Sashti Vratham : murugan soora samharam
- This festival is a ritual folk performance that recreates the killing of Asuras by Lord Murugan. It is performed in Tamil Nadu, Andhra Pradesh, Sri Lanka and Kerala at temples dedicated to Murugan. The Soorasamharam festival is also celebrated in Thiruvannur Subramanya Swami temple in Kozhikode District kerala in the name Sooranpada.
- In the year 2022, the festival will be celebrated on 30th October 2022.
- The date of Soorasamharam is fixed the Hindu lunisolar calendar and is celebrated on kārtika māsa, śukla pakṣa, ṣaṣṭhī tithi. Since the Tamil calendar months are based on the solar portion of the Hindu calendar. This festival falls in the month of either Aippasi or Karthigai in the Tamil calendar.
- The Sooranporu performance is based on the story of Murugan, also known as Skanda, as given in the Skandapurana. In the days preceding the performance the Skandapaurana is narrated in the temple. The performance ends with the killing of Soorapadman (or Padmasura) and his race. Which is depicted through the symbolic beheading of the four Asuras Anamughan, Panumughan, Simhamughan and Soorapadman.
- The Asuras are beheaded by Murugan using his weapon the vel a kind of spear or javelin. For the performance the vel is specially consecrated and during the staging of the show. It is ceremonially placed on the neck of the effigy after which the head is removed, depicting the beheading of the Asura. Sooranporu is staged at the end of a week-long Kanda Sashti festival.
- Sooranporu is preceded by several ceremonies on the last day of the Kanda Sashti festival. In some parts of Tamil Nadu devotees observe a six-day fast which they break at the end of the Sooranporu.
Palani Murugan :
- In Palani, a procession of Lord Murugan (known here as Dandayuthapaniswamy) is taken down from the hill temple. And led through the main thoroughfares of the town before the Sooranporu At Thiruchendur Murugan Temple. Six days celebrations for Kanda Sashti start from Pirathamai of Aippasi Masam culminate on Soorasamharam day. Thiru Kalyanam is observed on the next day of Soorasamharam.
-
சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்? இந்நாளில் விரதம் இருந்தால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? murugan soora samharam
சிவபெருமானுக்கு எப்படி பல திருவிளையாடல்கள் உள்ளனவோ, அதுபோல முருகனுடைய வரலாறுகளும் பல உள்ளன. அவற்றில் சிறப்புடையது அவன் தேவர்களுக்கு இடையறாது இடையூறு செய்த சூரபத்மன், சிங்கமுகன், பானுகோபன் முதலியவர்களை எல்லாம் கொன்று குவித்து தேவர்களுக்கும் மக்களுக்கும் அருள் புரிந்ததே. சூரசம்ஹாரம் என்பது சூரபத்மன் எனும் அரக்கனை முருகப்பெருமான் அழித்த நிகழ்வை கொண்டாடுவதாகும். அதன் நினைவாக முருகனுடைய கோயில்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்.
கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் திருமண பாக்கியம் கை கூடி வரும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்களும் முருகனை வணங்கி விரதம் மேற்கொண்டு கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும். இக்கட்டுரையில், சூரசம்ஹாரம் மற்றும் கந்த சஷ்டி விரதம் எப்போது எப்படி கொண்டாடப்பட வேண்டும் என்று காணலாம்.
சூரசம்ஹாரம் : murugan soora samharam
காசியப்ப முனிவர், மாயை என்ற தம்பதியருக்கு பிறந்தவர் சூரபத்மன். இவர் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தையும் பெற்றார். இந்த வரத்தால் சக்திகள் மிக்கவனாக தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான் அரக்கன் சூரபத்மன். இதை தடுக்க அவதாரம் எடுத்த முருகன், பார்வதியிடம் வேலைப் பெற்று, சூரபத்மனை போரில் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய கோயில்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்.
சூரசம்ஹாரம் & கந்த சஷ்டி விரதம் எப்போது? murugan soorasamharam
சஷ்டி விரதம் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை வளர்பிறையில் வரக்கூடியது என்றாலும், இந்தாண்டு 2021ல் கார்த்திகை மாதம் தொடங்குவதற்கு முன்னரே ஐப்பசி வளர்பிறையில் 6ஆம் நாள் கந்த சஷ்டி விரதம் வருகிறது. இந்த சஷ்டி விரதம் மிகவும் விஷேசமானது. இந்த முறை தீபாவளி பண்டிகை தினமான நவம்பர் 4 (ஐப்பசி 18) அன்று கந்த சஷ்டி விரதம் தொடங்கியது. நவம்பர் 9ஆம் தேதி ஆதாவது நாளை செவ்வாய்க் கிழமை அனைத்து முருகன் திருக்கோயில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடக்கும். நவம்பர் 10ம் தேதி புதன் கிழமை முருகப்பெருமான் தெய்வானையை கல்யாணம் நடைபெறும்.
சஷ்டி விரதம் எப்படி இருப்பது? murugan soorasamharam
இந்த சஷ்டி விரதம் வீட்டில் அல்லது கோயிலில் என இரண்டு இடங்களிலும் மேற்கொள்ளலாம். முடிந்த வரை முருகன் கோயிலில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. அதுவும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இந்த சஷ்டி விரதம் திருச்செந்தூர் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளான 2வது படை வீட்டில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
வீட்டில் எவ்வாறு விரதம் மேற்கொள்ளலாம்? murugan soora samharam
கோயிலில் அல்லாமல் வீட்டிலேயே விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து முடித்துவிட்டு முருகனுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்யலாம். வீட்டிலேயே முருகனை வணங்கி பாடலாம் கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம். ஒரு சிலர் ஆறு நாட்கள் விரதம் இருந்து, இந்த கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வார்கள். சிலர் ஆறு நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள், கந்தசஷ்டி தினத்தன்று ஒரு நாள் மட்டுமாவது விரதம் இருந்து முருகனை வணங்கலாம்.
குழந்தை வரம் : murugan soora samharam
பெற விரும்புபவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி தினங்களில் விரதமிருக்கலாம். ஆனால் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மகா சஷ்டியில் 6 நாள் விரதம் கடைப்பிடிப்பது அவர்களுக்கு மிகவும் விசேஷமானது. அப்போது குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் இருவரும் சேர்ந்து விரதம் இருப்பது நல்லது. கோயிலிலோ அல்லது வீட்டிலிருந்து கூட விரதம் இருக்கலாம்.
கந்த சஷ்டி விரத சிறப்புகள் : murugan soora samharam
இந்த விரதம் மேற்கொள்வதன் மூலம், தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்துபோகும். உங்களுக்கு கல்யாணம் யோகம் கூடிவரும். குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரபத்மனை வதம் செய்து, முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய தினமாக கந்தசஷ்டி பார்க்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் முருகனை வழிபட்டால், நாமும் வாழ்வில் பல வெற்றிகளை பெறலாம். இறுதிகுறிப்பு முருகப்பெருமானுக்கு உரிய செவ்வாய் கிழமையும், சஷ்டியும் சேர்ந்து ஒரே நாளில் வருவதால், இந்நாளில் விரதம் மேற்கொண்டு முருகனை வழிப்பட்டால் அனைத்து நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியாக வாழலாம் .